உள்ளூர் செய்திகள்
டி.என்.பி.எஸ்.சி தேர்வு

கோவையில் 8 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு

Published On 2022-01-11 11:17 GMT   |   Update On 2022-01-11 11:17 GMT
கோவையில் 8 மையங்களில் டிஎன்பிஎஸ்சி-யின் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளுக்கானத் தேர்வுகள் நடைபெற்றது
கோவை:

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்தன் காரணமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனவரி 9-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று டிஎன்பிஎஸ்சி-யின் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளுக்கானத் தேர்வுகள் முற்பகல், பிற்பகல் என இரு தேர்வுகள் நடைபெறவிருந்தன. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருந்தாலும் தேர்வர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று முதலில் கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில், முழு ஊரடங்கு நாளில் தேர்வர்களுக்கு பொதுப்போக்குவரத்து மற்றும் உணவுக்கான வசதி இல்லாத சூழலில், தேர்வு எழுதுபவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டும், தேர்வர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் அடிப்படையில், தேர்வு ஜனவரி 11-ந்தேதியான இன்று மாற்றிப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து இன்று கோவையில் 8 மையங்களில் டிஎன்பிஎஸ்சி-யின் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளுக்கானத் தேர்வுகள் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் 2720 பேர் எழுதினர்.

கோவை ஒப்பணக்கார வீதி மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி மையத்தில் 300 பேரும், ராஜகிரி துணிவணிகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 மையங்களில் 620 பேரும், வெரைட்டி ஹால் பிரசெண்டேஷன் மகளிர் பள்ளியில் 300 பேரும், ஆர்.எஸ் புரம் எஸ்.பி.கே.வி மேல்நிலைப்பள்ளியில் 300 பேரும், ராம்நகர் சபர்பன்ட் பள்ளியில் 300 பேரும், நவ இந்தியா ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் 3 மையங்களில் 600 பேரும், அவிநாசி ரோடு ஜி.ஆர்.ஜி பள்ளியில் 300 பேரும் என மொத்தம் 2 ஆயிரத்து 720 பேர் இன்று தேர்வு எழுதினார்கள்.

நேற்று முன்தினம் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுச் சீட்டினை பயன்படுத்தி அதில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் இன்று தேர்வு எழுதிக்கொள்ள அனு மதிக்கப்பட்டனர். இதே போல முகவசங்கள் அணிந்தும்,   சமூக  இடை வெளி கடைபிடித்தும், தேர்வு எழுதவந்தவர்களுக்கு வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்து தேர்வு மையத்தில் அனுமதிக்கபட்டனர்.
Tags:    

Similar News