செய்திகள்
கோப்பு படம்

கோவையில் உயரழுத்த மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம்

Published On 2019-12-05 11:57 GMT   |   Update On 2019-12-05 11:57 GMT
கோவையில் உயரழுத்த மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,
கோவை:

கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 42). இவர் கே.ஜி.சாவடி பகுதியில் உள்ள தனியார் மில்லில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கம்பெனி நிர்வாகம் அவரை வேலையை விட்டு நிறுத்தி விட்டது. இதனால் அவர் கடந்த சில நாட்களாகவே மன வேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று நவக்கரை பகுதிக்கு சென்ற அவர் அங்கிருந்த மின்சார கோபுரத்தின் மீது ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் அந்த வழியாக தமிழ்நாடு மின்சார வாரிய துணை என்ஜினீயர் கோபாலகிருஷ்ணன் வந்தார். அவர் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து அந்த நபரை கீழே இறங்கி வாருங்கள் என்று எச்சரித்தார். ஆனால் அவர் கேட்காமல் அங்கேயே நின்றார். இதுகுறித்து கே.ஜி.சாவடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்சார கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபரை கீழே இறக்கி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News