செய்திகள்
டெல்லியில் கனமழை

டெல்லியில் 45 வருடத்திற்குப் பிறகு மே மாதத்தில் கொட்டித் தீர்த்த கனமழை

Published On 2021-05-19 18:02 GMT   |   Update On 2021-05-19 18:02 GMT
குஜராத் மாநிலத்தில் கரையை கடந்த டவ்-தே புயல் காரணமாக டெல்லியில் இன்றிரவு 1946-ம் ஆண்டிற்குப் பிறகு கனமழை பெய்துள்ளது.
அரபிக் கடலில் உருவான டவ்-தே புயல் நேற்று முன்தினம் குஜராத் கடலோர பகுதியில் கரையை கடந்தது. அதீதிவிர புயலான டவ்-தே புயல் கரையை கடந்தாலும். ஒன்றிரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.

டெல்லியில் இன்றிரவு 8.30 மணியளவில் கனமழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் 60 மி.மீட்டர் மழை கொட்டித்தீர்தது. இதற்கு முன் மே மாதத்தில் கடந்த 1976-ம் ஆண்டு மே மாதம் 24-ந்தேதி 60 மி.மீட்டர் மழை பெய்தது. அதன்பிறகு தற்போது 45 வருடம் கழித்து மே மாதம் ஒரே நாளில் அதிக மழை பெய்துள்ளது.

மேலும் வெப்பநிலை 23.8 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. 1951-ம் ஆண்டு குறைந்தபட்சமாக 16 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியிருந்தது. அதன்பின் தற்போதுதான் குறைந்த வெயில் பதிவாகியுள்ளது.
Tags:    

Similar News