ஆட்டோமொபைல்
யமஹா ஒ.இஸட்.எப்.ஆர்15. வி 3.0

புதிய வண்ணத்தில் யமஹா இரு சக்கர வாகனங்கள்

Published On 2019-08-29 04:27 GMT   |   Update On 2019-08-29 04:27 GMT
பார்ப்பவரை கவரக்கூடிய புதிய வண்ணத்தில் யமஹா ஒ.இஸட்.எப்.ஆர்15. வி 3.0, எப்225, சிக்னஸ் ரே ஆகியன சந்தைக்கு வந்துள்ளன.
சீறிப் பாயும் இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள யமஹா நிறுவனம் மான்ஸ்டர் ஜி.பி. வண்ணம் கொண்டதாக தனது தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. மோட்டார் பந்தயங்களில் தென்படும் மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ ஜி.பி. வண்ணத்தில் இவை வெளிவந்துள்ளன.

நிறுவனத்தின் பிரபலமான யமஹா ஒ.இஸட்.எப்.ஆர்15. வி 3.0, எப்225, சிக்னஸ் ரே ஆகியன அனைத்தும் இப்புதிய வண்ணத்தில் வந்துள்ளன. வழக்கமான வண்ணத்தில் வெளிவந்த மாடல்களின் விலையைக் காட்டிலும் இது சற்று அதிகமாகும். ஆர் 15 மாடல் ரூ.500 கூடுதலாக ரூ.1,42,780 விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



இதில் டார்க்நைட் ஸ்கீம் பெயிண்ட் உள்ள வாகனத்தின் விலை ரூ.2,500 அதிகமாகும். எப்.இஸட் 25 மாடலின் விலை ரூ.1,36,680 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரே இஸட் ஆர் ஸ்கூட்டர் விலை ரூ.59,028 ஆக உள்ளது.

இதில் டார்க் நைட் ஸ்கீமை தேர்வு செய்வோர் கூடுதலாக ரூ.1,500 செலவிட வேண்டியிருக்கும். கூடுதலாக செலுத்தினாலும் வாடிக்கையாளர்களுக்கு மான்ஸ்டர் எனர்ஜி பிராண்ட் டி-ஷர்ட் பரிசாக வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News