செய்திகள்
வாக்களித்ததற்கான அடையாள மை

திருப்பூர் மாவட்டத்தில் 62.80 சதவீத வாக்குப்பதிவு: தொகுதிகள் வாரியாக உள்ளே...

Published On 2021-04-06 17:35 GMT   |   Update On 2021-04-06 17:35 GMT
தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதில் திருப்பூர் (தெற்கு) மாவட்டத்தில் 62.80 சதவீத வாக்குப்பதிவு பதிவாகின.
திருப்பூர்:

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின.

அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

திருப்பூரில் (தெற்கு) 62.80 சதவீத வாக்குப்பதிவு பதிவாகின. தேர்தல் ஆணைய செயலியில் உள்ள தகவலின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:-

அவிநாசி - 66.82%
தாராபுரம் - 74.14%
காங்கேயம் - 77.29%
மடத்துக்குளம் - 67.76%
பல்லடம் - 66.66%
திருப்பூர் (வடக்கு) - 62.60%
திருப்பூர் (தெற்கு) - 62.80%
உடுமலைப்பேட்டை  - 71.42%
Tags:    

Similar News