ஆன்மிகம்
திருக்கபிஸ்தலம் கஜேந்திர வரதப் பெருமாள்

திருக்கபிஸ்தலம் கஜேந்திர வரதப் பெருமாள்

Published On 2020-10-01 08:44 GMT   |   Update On 2020-10-01 08:44 GMT
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கபிஸ்தலம். இங்குள்ள கஜேந்திர வரதர் திருக்கோவிலில், கஜேந்திர வரதப் பெருமாள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கபிஸ்தலம். இங்குள்ள கஜேந்திர வரதர் திருக்கோவிலில், கஜேந்திர வரதப் பெருமாள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தாயாரின் திருநாமம், லோகநாயகி என்பதாகும். கஜேந்திர மோட்சம் நிகழ்ந்த தலம் இது. இந்திரத்யும்னன் என்னும் மன்னன், விஷ்ணுவின் மீது அதீத பக்தி வைத்திருந்தான். அதன்காரணமாக ஒரு முறை அங்கு வந்த துர்வாச முனிவரை கவனிக்கத் தவறினான். இதனால், அவனை மதம் பிடித்த யானையாக மாறும்படி முனிவர் சபித்துவிட்டார். யானையாக மாறினாலும், அந்த மன்னனுக்கு விஷ்ணுவின் மீதான பக்தி அப்படியே இருந்தது.

கஜேந்திரன் என்னும் பெயர் கொண்ட அந்த யானை, ஒரு நாள் குளத்தில் நீர்குடிக்க இறங்கியது. அப்போது அந்த குளத்திற்குள் இருந்த முதலை, யானையின் காலை கவ்விப் பிடித்துக்கொண்டது. இந்த முதலையும், முன் ஜென்மத்தில் கந்தர்வனாக இருந்து சாபம் பெற்றவன்தான். முதலையின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் யானை பிளிறியது. ஒரு கட்டத்தில் ‘ஆதிமூலமே..’ என்று யானை கூப்பிடவும், கருட வாகனத்தில் வந்த விஷ்ணு பகவான், யானைக்கும், முதலைக்கும் சுய உருவைக் கொடுத்து அருள்பாலித்தார். அனுமன், சுக்ரீவன் மற்றும் பிற வானரங்கள் வழிபட்ட தலம் என்பதால், இது ‘கபிஸ்தலம்’ என்றானது. ‘கபி’ என்பதற்கு ‘வானரம்’ என்று பெயர்.
Tags:    

Similar News