செய்திகள்
எம்எஸ்கே பிரசாத்

பதவி முடிவடைவதால் வருத்தம் ஏதுமில்லை: தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத்

Published On 2019-12-04 11:41 GMT   |   Update On 2019-12-04 11:41 GMT
சீனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு பதவிக்காலம் முடிவடைகிறது என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்ததில் எந்த வருத்தமும் இல்லை என எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக எம்எஸ்கே பிரசாத் உள்ளார். இவர் கடந்த 2015-ல் நியமனம் செய்யப்பட்டார். லோதா கமிட்டி பரிந்துரைப்படி அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு வரை இருக்கிறது.

ஆனால், பழைய நடைமுறைப்படி நான்கு ஆண்டுகளோடு அவரது பதவிக்காலம் முடிவடைகிறது. மேலும், அவருடன் உள்ள சக உறுப்பினர்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார்.

இதனால் இந்த மாதத்தோடு தேர்வுக்குழுவின் காலம் முடிவடைய இருக்கிறது. டி20 உலக கோப்பை தொடருக்கான அணியை தேர்வு செய்ததோடு பதவியை நிறைவு செய்யலம் என எம்எஸ்கே பிரசாத்  நினைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த ஆண்டோடு பதவிக்காலம் முடிவடையும் நிலை உருவாகியுள்ளதை நினைத்து வருத்தம் இல்லை என்று எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘டி20 உலக கோப்பை தொடருக்கு முன் பதவியில் இருந்து வெளியேறுவது குறித்து நான் வருத்தப்படவில்லை. அதை பற்றி சிந்திக்கவும் இல்லை. பிசிசிஐ அதற்கான விதிமுறைப்படி செல்லும். அவர்களின் கொள்கை என்னவோ, அதை பின்பற்றுகிறது.

நேரம்தான் முக்கியது. உங்களுக்கான நேரத்தின்போது, உங்களுடையை சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும். அதை நாங்கள் செய்துள்ளோம் என்று நினைக்கிறோம். நாங்கள் போதுமான அளவிற்கு பேக்-அப் வீரர்களை வைத்துள்ளோம். இந்தியா சரியான காம்பினேசனில் சென்றால், அடுத்த வருடம் நடைபெறும் டி20 உலக கோப்பை நமக்குதான்’’ என்றார்.
Tags:    

Similar News