லைஃப்ஸ்டைல்
கொரோனா

கொரோனா பயத்தால் மக்களிடம் ஏற்பட்ட பாதிப்புகள்- திகில் தகவல்கள்

Published On 2020-08-24 09:28 GMT   |   Update On 2020-08-24 09:28 GMT
கொரோனா ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கும் மக்களிடம் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது பற்றி இணையதளம் வழியாக கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. அதில் திகிலும், சுவாரசியமும் கலந்த பல்வேறு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கொரோனா ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கும் மக்களிடம் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது பற்றி இணையதளம் வழியாக கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. அதில் திகிலும், சுவாரசியமும் கலந்த பல்வேறு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

‘வீடுகளில் இருக்கும் நேரத்தில் தினமும் எவ்வளவு நேரத்தை செல்போனில் செலவிட்டீர்கள்?’ என்ற கேள்விக்கு, 54 சதவீதம் பேர் ஒரு மணி நேரம் முதல் மூன்று மணிநேரத்தை செல்போனில் செலவிட்டதாக கூறியிருக்கிறார்கள். 33 சதவீதம் பேர் மூன்று முதல் 6 மணி நேரத்தை செல்போனிடம் இழந்திருக்கிறார்கள். 13 சதவீதம் பேர் மட்டுமே ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக செலவிட்டுள்ளனர்.

‘கொரோனா முடக்கத்தால் வீடுகளில் இருந்தபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?’ என்ற கேள்விக்கு, ‘கஷ்டப்பட்டுதான் பொழுதுபோனது’ என்று 45 சதவீதம் பேரும், ‘போரடித்தது’ என்று, 39 சதவீதம் பேரும், ‘மகிழ்ச்சியாக இருந்தது’ என்று 13 சதவீதத்தினரும், ‘கொடுமையான அனுபவமாக இருந்தது’ என்று 3 சதவீதத்தினரும் கூறியிருக்கிறார்கள்.

‘ஊரடங்கு காலத்தில் நீங்கள் எதை நினைத்து அதிகம் பயம்கொண்டீர்கள்?’ என்ற கேள்விக்கு ‘பணப் பிரச்சினையை நினைத்துதான் அதிகம் பயம்கொண்டோம்’ என்பது 45 சதவீதத்தினர் பதில். 24 சதவீதம் பேர் ‘ஆரோக்கியத்தை நினைத்துதான் அதிகம் கவலைப்பட்டோம்’ என்று கூறியிருக்கிறார்கள். பொதுப்போக்குவரத்து இல்லாமல் இருப்பது 23 சதவீதத்தினருக்கு அதிக கவலையை அளித்திருக்கிறது. ‘அவ்வப்போது கொரோனாவால் பலர் உயிரிழந்துகொண்டிருப்பது தங் களை பாதித்தது’ என்று 8 சதவீதத்தினர் கூறி இருக்கிறார்கள்.

‘இந்த காலகட்டத்தில் உங்களின் உடனடி எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது?’ என்ற கேள்விக்கு 55 சதவீதத்தினர் ‘உடனடியாக தடுப்பூசி கண்டுபிடிக்கவேண்டும்’ என் றும், 34 சதவீதத்தினர் ‘கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும்’ கருத்து பகிர்ந்துள்ளனர். 11 சதவீதத்தினர் ‘கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ளவேண்டும்.. அதை தவிர்த்து வேறு வழியில்லை..’ என்றும் கூறியிருக்கிறார்கள்.

‘கொரோனா காலத்தில் அதிகமாக எதை இழந்ததாக நினைக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு கிடைத்த பதில்கள் வித்தியாசமானது. பயணங்கள் செய்ய முடியாததும், ஓட்டல் உணவுகளை சாப்பிட முடியாததும் பெரிய இழப்பு என்பது 52 சதவீதத்தினர் கருத்து. விரும்பியவர்களை சந்திக்க முடியாமல் போனதுதான் அதிக வருத்தம் தருவதாக 32 சதவீதத்தினர் பதில் அளித்துள்ளனர். 8 சதவீதத்தினர் ‘சினிமா பார்க்க முடியவில்லையே’ என்று வருந்தியதாகவும், 8 சதவீதத்தினர் ஷாப்பிங் மகிழ்ச்சியை இழந்துவிட்டதாகவும் கருத்து பகிர்ந்திருக்கிறார்கள். தனியார் அமைப்பு ஒன்று இந்த கருத்துக்கணிப்பு தகவலை வெளியிட்டிருக்கிறது.

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட நல்ல விஷயங்கள் என்னென்ன? என்ற கேள்விக்கு கிடைத்திருக்கும் பதில் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.

- 23 சதவீதத்தினர் சமையலை நன்றாக கற்றுக்கொண்டதாக கூறியிருக்கிறார்கள்.

- 19 சதவீதத்தினர் பிடித்த பழைய சினிமாக்களை பார்த் திருக்கிறார்கள்.

- 18 சதவீதத்தினர் முறையான உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

- 15 சதவீதத்தினர் வீட்டுத் தோட்டங்களை உருவாக்கி பொழுதை பயனுள்ளதாக கழித்திருக்கிறார்கள்.

- 14 சதவீதத்தினர் நிறைய புத்தகங்களை வாசித்து முடித்ததாக சொல்கிறார்கள்.

- 11 சதவீதத்தினர் பழைய நண்பர்களின் தொடர்பு எண்களை தேடிப்பிடித்து நட்பை புதுப்பித்து பேசி மகிழ்ந்ததாக கூறியிருக்கிறார்கள்.
Tags:    

Similar News