செய்திகள்
கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

கூலி உயர்வு கோரி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் - விசைத்தறியாளர்கள் முடிவு

Published On 2021-10-09 07:07 GMT   |   Update On 2021-10-09 07:07 GMT
கூலி உயர்வு பேச்சுவார்த்தைகளில் இழுபறி நிலை ஏற்பட்டால் விசைத்தறிகளை முழுமையாக நிறுத்தி கூலி உயர்வு கிடைக்கும் வரை வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
பல்லடம்:

திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் சின்னம்மன் சேவா சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  

கூட்டத்திற்கு திருப்பூர் - கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம், சங்க பொருளாளர் முத்துக்குமாரசாமி,துணைத் தலைவர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

துணைச்செயலாளர் பாலாஜி வரவேற்று பேசினார். கூட்டத்தில் வரும் 22 - ந்தேதி அரசு அதிகாரிகள் முன்னிலையில் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் நடைபெறஉள்ள பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவுகள் எட்டப்படவில்லையென்றால், விசைத்தறிகளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, தொடர்ந்து கூலி உயர்வு பேச்சுவார்த்தைகளில் இழுபறி நிலை ஏற்பட்டால் விசைத்தறிகளை முழுமையாக நிறுத்தி கூலி உயர்வு கிடைக்கும் வரை வேலைநிறுத்த போராட்டம் செய்வது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

கூட்ட முடிவில் சங்க துணைத்தலைவர் சக்திவேல் நன்றி கூறினார். 
Tags:    

Similar News