தொழில்நுட்பம்
சாம்சங் கேலக்ஸி ஏ72

108 எம்பி கேமராவுடன் உருவாகும் சாம்சங் ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்

Published On 2021-09-18 04:25 GMT   |   Update On 2021-09-18 04:25 GMT
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் 108 எம்பி கேமராவுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ73 ஸ்மார்ட்போனினை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 108 எம்பி பிரைமரி கேமரா கொண்ட முதல் ஏ சீரிஸ் மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் பிராசஸர்,8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆமோலெட் டிஸ்ப்ளே போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



முந்தைய கேலக்ஸி ஏ72 மாடலில் 6.7 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் சூப்பர் ஆமோலெட் இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். வழங்கப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News