செய்திகள்
முதலமைச்சர் முக ஸ்டாலின்

12 மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

Published On 2021-06-08 13:10 GMT   |   Update On 2021-06-08 13:16 GMT
சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் கடன் தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 12 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை:

12 மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழக முதலமைச்சர்  முக ஸ்டாலின்  கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:-

சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள், வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம் தரப்பட வேண்டும்.

மத்திய நிதி அமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு 12 மாநில அரசுகளுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு   முக ஸ்டாலின்  அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
Tags:    

Similar News