ஆன்மிகம்
திருப்பதி

ரத சப்தமி விழா: திருப்பதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு

Published On 2021-02-16 07:14 GMT   |   Update On 2021-02-16 07:14 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 19-ந்தேதி ரத சப்தமி விழா நடக்கிறது. இது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருமலை :

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 19-ந்தேதி ரத சப்தமி விழா நடக்கிறது. அன்று காலை முதல் இரவு வரை ஏழுமலையான் 7 வாகனங்களில் வலம் வருவார்.

இது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருமலை- திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை, திருப்பதி புறநகர் மாவட்ட போலீசார் இணைந்து ஆலோசனை நடத்தினர்.

தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை பிரிவு அதிகாரி கோபிநாத் ஜாட்டி, புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெங்கட அப்பலா நாயுடு ஆகியோர் பங்கேற்றனர்.

ரத சப்தமி விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் பார்க்கிங் வசதிகள், கோவிலின் நான்கு மாடவீதிகளில் நடக்கும் வாகன சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு அன்னப் பிரசாதம் வினியோகம், மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகளை செய்து கொடுப்பது, அலிபிரியில் தரிசன டோக்கன்களை பரிசோதனை செய்வது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் திருமலை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முனிராமையா, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News