தொழில்நுட்பம்
ஏர்டெல்

பயனர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்

Published On 2020-08-11 05:46 GMT   |   Update On 2020-08-11 05:46 GMT
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்கலுக்கு தினமும் 1 ஜிபி அதிவேக டேட்டாவினை இலவசமாக வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களில்ல அக்கவுண்ட்களை ரீசார்ஜ் செய்யாமல் இருப்பவர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள் உள்ளிட்ட பலன்களை மூன்று நாட்களுக்கு சோதனை முறையில் இலவசமாக வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக ரூ. 48 மற்றும் ரூ. 49 என குறைந்த தொகை சலுகைகளை ரீசார்ஜ் செய்வோருக்கு ஏர்டெல் நிறுவனம் 1 ஜிபி இலவச டேட்டா வழங்கியது. இவ்வாறு இலவச டேட்டா வழங்குவதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டியை எதிர்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.



இலவச சலுகையில் தேர்வு செய்யப்படும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் குறுந்தகவல் மூலம் தெரியப்படுத்தி வருகிறது. இந்த குறுந்தகவல் அடங்கிய ஸ்கிரீன்ஷாட் வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதேபோன்ற சலுகைகளை தொடர்ந்து பெற அன்லிமிட்டெட் சலுகையை தேர்வு செய்ய வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் தெரிவித்து உள்ளது.

தங்களின் அக்கவுண்ட்களை ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களில் இலவச சலுகையை வழங்க ஏர்டெல் எவ்வாறு தேர்வு செய்கிறது என்பது பற்றிய தகவல் இதுவரை வெளியாகவில்லை. மேலும் இந்த சலுகை இந்தியா முழுக்க வழங்கப்படுகிறதா அல்லது தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறதா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
Tags:    

Similar News