லைஃப்ஸ்டைல்
குழந்தைகளின் நட்பை பாராட்டுங்கள்

குழந்தைகளின் நட்பை பாராட்டுங்கள்

Published On 2021-05-25 04:31 GMT   |   Update On 2021-05-25 04:31 GMT
குழந்தைகளை எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். உங்களுக்கு அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள், நீங்கள் எந்த அளவுக்கு அவர்கள் மேல் பிரியமாக இருக்கிறீர்கள் என்பதை அவ்வப்போது புரியவையுங்கள்.
நாம் இயல்பாக செய்யும் காரியங்கள் கூட குழந்தைகளின்  மனதை காயப்படுத்திவிடும். நாமும் குழந்தைகளாக மாறி சிந்தித்தால் மட்டுமே அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும். தன்னை விட யாருக்காவது அதிக முக்கியத்துவம் கொடுத்தால் அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. கோபம், வருத்தம், பொறாமை இவையெல்லாம் வெளிப்பட்டு அவர்களது மனதை அலைக்கழிக்கும். அந்த சமயத்தில் பக்குவமாக பேசி புரிய வைக்க வேண்டும். பொறாமை குணம் தோன்றும்போது சமாதானப்படுத்தி, அவர்களுக்கு பொறுப்புணர்வை புரியவைக்க வேண்டும். தான் நிராகரிக்கப்படவில்லை என்பதை உணரும்போதுதான் அவர்களது மனம் அமைதி அடையும்.

குழந்தைகளை எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். உங்களுக்கு அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள், நீங்கள் எந்த அளவுக்கு அவர்கள் மேல் பிரியமாக இருக்கிறீர்கள் என்பதை அவ்வப்போது புரியவையுங்கள். மற்றவர்களை நேசிப்பதால் அவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஒருபோதும் குறைந்துபோய்விடாது என்பதையும் விளக்கி கூறுங்கள். அது தனிமை எண்ணத்தை போக்க உதவும்.

வெறுப்பு: எந்தவொரு சூழ்நிலையிலும் மற்றவர்கள் மீது வெறுப்பை காண்பிப்பதற்கு அனுமதிக்காதீர்கள். அது அவர்களை பலவீனப்படுத்திவிடும். தனிமையிலும் ஆழ்த்திவிடும். தங்களை சூழ்ந்திருக்கும் நட்பு வட்டத்தை நேசிக்க கற்றுக்கொடுங்கள். சிறு வயதிலேயே நட்பு வட்டத்தை வளர்த்துக்கொள்வது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவும், பாதுகாப்பானதாகவும் அமையும். நேசிப்புதான் சுற்றி இருக்கும் நட்பை பலப்படுத்தும். வெறுப்பு உணர்வோ எதிரிகளைத்தான் உருவாக்கும்.

கோபம்: அடிக்கடி அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர் மீது ஏதோ ஒரு வகையில் கோபம் இருந்து கொண்டிருக்கும். அது வேறு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்பட்டதாக இருக்கலாம். அதை வெளியே சொல்ல முடியாமல் வேறு விதத்தில் பெற்றோர் மீது கோபத்தை வெளிப்படுத்தலாம். அடம்பிடிக்கும் குழந்தைகளை அடிக்காதீர்கள். அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மற்ற குழந்தைகளுக்கு கொடுக்கும் பரிசு பொருட்கள் கூட அவர்களை கோபப்படுத்தலாம். அந்த சமயத்தில் அவர்களுக்கும் பரிசு பொருள் வாங்கி கொடுத்து சமாதானப்படுத்துங்கள். சில சமயங்களில் எதற்கு கோபித்துக்கொள்கிறார்கள் என்பதை பெற்றோரால் கண்டுபிடிக்கவே முடியாது.
Tags:    

Similar News