செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11 ஆயிரத்து 620 கன அடியாக அதிகரிப்பு

Published On 2021-08-24 03:56 GMT   |   Update On 2021-08-24 03:56 GMT
ஒகேனக்கல் நீர்பிடிப்பு பகுதியை ஓட்டிய பிலிகுண்டுலு, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, நாட்றாம்பாளையம் உள்பட பல பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜாசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 446 கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு 6316 கன அடி தண்ணீரும் வருகிறது. கபினியில் இருந்து வினாடிக்கு 2875 கன அடி தண்ணீர், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 5545 கன தண்ணீரும் காவிரியில் திறந்துவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஒகேனக்கல் நீர்பிடிப்பு பகுதியை ஓட்டிய பிலிகுண்டுலு, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, நாட்றாம்பாளையம் உள்பட பல பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஒனேக்கலில் நேற்று மாலை 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்றிரவு மேலும் அதிகரித்து 12 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துகொட்டுகிறது. ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.

இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று 10 ஆயிரத்து 301 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 11 ஆயிரத்து 620 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 8 ஆயிரம் கன அடியும், கால்வாயில் 550 கன அடியும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 65.77 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 66.08 அடியாக அதிகரித்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் அணை நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News