செய்திகள்
உத்தவ் தாக்கரே

எம்.பி. தற்கொலை: விசாரணைக்கு அதிகாரிகள் ஒத்துழைக்க மோடி, அமித் ஷா கேட்டுக்கொள்ள வேண்டும்- உத்தவ் தாக்கரே

Published On 2021-02-28 17:16 GMT   |   Update On 2021-02-28 17:16 GMT
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மக்களவை எம்.பி. மோகன் தெல்கார் தற்கொலை வழக்கில் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க பிரதமர் மோடி, அமித்து கேட்டுக்கொள்ள வேண்டும் என உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தெற்கு மும்பையில் உள்ள ஒட்டல் ஒன்றில் ஏழு முறை மக்களவை எம்.பி.யாக இருந்த மோகன் தெல்கார் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை செய்த அறையில் குஜராத்தியில் எழுதப்பட்ட 14 பக்க கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் சிலர் பெயர்களை குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து மும்பை போலீசார் யூனியன் பிரதேசம் சென்று விசாரணை நடத்த இருக்கிறது.

23 வயது பெண் ஒருவர் மாடியில் இருந்து குதித்து பலியான விவகாரத்தில் மகாராஷ்டிர மாநில மந்திரி சஞ்சய் ரத்தோட்டை ராஜினாமா செய்ய பா.ஜனதா வலியுறுத்தியது. அவரும் ராஜினாமா செய்துள்ளார்.

எல்லாவற்றையும் சேர்த்து வைத்து பதிலடி கொடுதுள்ளார் உத்தவ் தாக்கரே. இதுகுறித்து உத்தவ் தாக்கரே கூறுகையில் ‘‘மும்பை போலீஸ் தாத்ரா மற்றும் நகர் ஹவெலி சென்று விசாரணை நடத்தும்போது அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரதமர் மோடி, அமித் ஷா கேட்டுக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.

அவருடைய தற்கொலை கடிதத்தில் சிலர் பெயர்கள் உள்ளனர். யாருமே அதைப் பற்றி ஏன் பேசவில்லை. இதுவரை விசாரணை தொடங்கப்படவில்லை. ஆனால், விசாரணைக்காக தாத்ரா செல்லும்போது  மோடி, அமித் ஷா அதிகாரிகளை கேட்டுக்கொள்ள வேண்டும்’’ என்றார்.
Tags:    

Similar News