தொழில்நுட்பம்

ரூ.3000 பட்ஜெட்டில் இந்தியா வரும் ரெட்மி ஸ்மார்ட்போன்

Published On 2019-02-26 07:50 GMT   |   Update On 2019-02-26 08:33 GMT
ரெட்மி பிரண்டு தனது நோட் 7 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #RedmiGo #Smartphone



ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 28 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனுடன் ரெட்மி நோட் 7 ப்ரோ, ரெட்மி கோ மற்றும் Mi ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் ஹெட்செட் யூத் எடிஷன் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 7 மாடல் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டதை விட வித்தியாசமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனை தொடர்ந்து ரெட்மி கோ மற்றும் Mi ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் ஹெட்செட் யூத் எடிஷன் இந்திய விலை இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி கோ ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு கோ மாடலாக இருக்கும் என்றும் இதன் விலை முதல் மூன்று மாதங்களுக்கு ரூ.3,499 முதல் துவங்கும் என கூறப்படுகிறது. Mi ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் ஹெட்செட் யூத் எடிஷன் விலை ரூ.1,499 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

ரெட்மி கோ ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு கோ சாதனம் என்பதால், இதன் வன்பொருள் அம்சங்கள் குறைந்த திறன் வழங்கும் என தெரிகிறது. இதன் விலை ரூ.3000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்றும் இது இந்தியாவில் ரெட்மியின் விலை குறைந்த ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்திய சந்தையில் ரெட்மி ஸ்மார்ட்போன்கள் அதிக விற்பனையை பதிவு செய்வதால், புதிய ரெட்மி கோ விற்பனையும் அந்நிறுவன வழக்கத்தை பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுபற்றி ரெட்மி தரப்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
Tags:    

Similar News