செய்திகள்
தீக்குளிக்க முயற்சி

கணவரின் கள்ளத்தொடர்பால் மகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்

Published On 2019-10-14 14:26 GMT   |   Update On 2019-10-14 14:26 GMT
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மகளுடன் தீக்குளிக்க முயன்ற தாயை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தின்போது திடீரென ஒருபெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர் கூறியதாவது:-

திண்டுக்கல் என்.எஸ். நகர் ராஜகாளியம்மன் நகரை சேர்ந்த எனது பெயர் சகுந்தலா. எனக்கு திருமணம் நடந்து 19 வருடங்கள் ஆகியது. கோகுலபிரியா, சுபாஷ், சூரியபிரகாஷ் ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். 

எனது கணவர் முன்னாள் ராணுவ வீரர். தற்போது நத்தம் தாலுகா அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். எனது கணவர் 2 பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டு என்னை கொடுமைப்படுத்தி வருகிறார். எனது கணவரின் கொடுமை தாங்க முடியாமல் தான் தனியாக வந்து விட்டேன். இதனால் எனது 2 மகன்கள் கணவருடன் வசித்து வருகின்றனர். மகளுடன் வசித்து வரும் நான் சாப்பாட்டுக்கு மிகுந்த கஷ்டப்பட்டு வருகிறேன். குடும்ப தேவைக்காக சிலரிடம் கடன் வாங்கி அதனை அடைக்க முடியாமல் உள்ளேன். எனது கணவர் எனக்கு எந்த உதவியும் செய்வதில்லை. 

முன்னாள் ராணுவ வீரர் அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்தேன். இதனால் நான் வேலை பார்க்கும் நிறுவன அதிகாரியிடம் கூறி என்னை வேலையில் இருந்து நீக்கி விட்டார். எனவே எனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கும், எனது மகளுக்கும் எனது உயிருக்கும் ஆபத்து உள்ளது. எனவே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். 

இதனையடுத்து அவர் தனது மனுவை கலெக்டரிடம் அளித்து சென்றார். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News