உள்ளூர் செய்திகள்
பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்த காட்சி.

நெல்லையில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

Published On 2022-01-10 10:13 GMT   |   Update On 2022-01-10 10:13 GMT
தமிழகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. நெல்லையில் இந்த பணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
நெல்லை:

தமிழகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது.

முதல் கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதை கடந்த இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட அரசு பரிந்துரை செய்துள்ளது.

இதற்காக மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி முதல் மே 3-ந்தேதி வரை முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுமுடித்தவர்களை தகுதி உடையவர்களாக கொண்டு பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டியவர்களை கணக்கெடுக்கும் பணி நடந்தது.

அதன்படி நெல்லை மாவட்டத்தில் தகுதி உடைய நபர்களாக 16 ஆயிரத்து 800 பேர் கண்டறியப்பட்டனர். இதில் 5,378 சுகாதார பணியாளர்களும், 3,711 முன்கள பணியாளர்களும், 7 ஆயிரத்து 611 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளனர்.

முதல் மற்றும் 2-வது தவணைகளில் எந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதோ, அந்த தடுப்பூசி தான் பூஸ்டர் தடுப்பூசியாக இன்று முதல் போடப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் அரசு பல்நோக்கு மருத்துவ மனையில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மருத்துவ கல்லூரி டீன் ரவிச்சந்திரன், மாநகர நல அலுவலர் ராஜேந்திரன், பல்நோக்கு மருத்துவமன உறைவிட மருத்துவர் ஷர்மிளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் முதல் கட்டமாக செவிலியர்கள் மற்றும் டாக்டர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
Tags:    

Similar News