தொழில்நுட்பம்
கேலக்ஸி ஏ குவாண்டம்

உலகளவில் முதல் முறையாக குவாண்டம் சிப் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2020-05-15 05:51 GMT   |   Update On 2020-05-15 05:51 GMT
உலகளவில் முதல் முறையாக குவாண்டம் சிப்செட் கொண்ட ஸ்மார்ட்போனினை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
 


சாம்சங் நிறுவனம் தென் கொரியாவை சேர்ந்த எஸ்கே டெலிகாம் நிறுவனத்துடன் இணைந்து கேலக்ஸி ஏ குவாண்டம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது குவாண்டம் ரேண்டம் நம்பர் ஜெனரேஷன் சிப்செட் கொண்ட உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். 

இது உலகின் மிகவும் சிறிய சிப்செட் ஆகும். இந்த சிப்செட் இருப்பதால், பயனர்கள் கொரிய நாட்டு ஆன்லைன் பணபரிவர்த்தனை சேவைகளை மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் குவாண்டம் க்ரிப்டோ தொழில்நுட்பத்தை சார்ந்து இயங்குகிறது. இத்துடன் ஸ்மார்ட்போன் விவரங்களை பாதுகாப்பாக வைக்கவும் இது உதவுகிறது.



இதன் சிறப்பம்சங்கள் கேலக்ஸி ஏ71 5ஜி மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, ஆக்டா கோர் பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. 

புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 32 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

கேலக்ஸி ஏ குவாண்டம் சிறப்பம்சங்கள்

- 6.7 இன்ச் ஃபுல் ஹெச்டி 1080x2400 பிக்சல் சூப்பர் AMOLED பிளஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
- 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 980 பிராசஸர்
- மாலி-G76 MP5GPU
- 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் சாம்சங் ஒன் யுஐ 2.0
- டூயல் சிம்
- 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, எல்இடி ஃபிளாஷ்
- 12 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
- 5 எம்பி டெப்த் சென்சார்
- 5 எம்பி மேக்ரோ சென்சார்
- 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- சாம்சங் பே
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப்-சி
- 4500 எம்ஏஹெச் பேட்டரி
- 25வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்

சாம்சங் கேலக்ஸி ஏ குவாண்டம் ஸ்மார்ட்போன் ப்ரிசம் கியூப் பிளாக், ப்ரிசம் கியூப் சில்வர் மற்றும் ப்ரிசம் கியூப் புளூ நிறங்களில் கிடைக்கிறது. தென் கொரியாவில் இதன் விலை 649,000 வொன் இந்திய மதிப்பில் ரூ. 39,860 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News