செய்திகள்
கொரோனா வைரஸ்

நீலகிரி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் 150 ஆக உயர்வு

Published On 2020-09-13 09:31 GMT   |   Update On 2020-09-13 09:31 GMT
நீலகிரி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் 150 ஆக உயர்ந்து உள்ளது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதாவது நேற்று முன்தினம் வரை 2,218 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நீலகிரியில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 130 ஆக இருந்தது. இந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து உள்ளது. நேற்று வரை 150 இடங்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அந்த பகுதிகளுக்குள் வெளியாட்கள் உள்ளே செல்லவும், அங்கு வசிப்பவர்கள் வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து சுகாதார பணிகள் மற்றும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News