வழிபாடு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் முறையாக கடைபிடிக்கப்படாத கொரோனா தடுப்பு நடவடிக்கை...

Published On 2022-01-25 08:30 GMT   |   Update On 2022-01-25 08:30 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் எந்தவித கொரோனா தடுப்பு நடவடிக்கையும் முறையாக மேற்கொள்ளப்பட வில்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். கோவிலுக்குள் வரும் பக்தர்கள் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுர வாசல் வழியாக உள்ளே வருகின்றனர்.

கடந்த முறை கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்த போது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானியங்கி கருவி மூலம் கைகளுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டது. மேலும் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பம் கண்டறியப்பட்டது. ஆனால் அதுபோன்ற எந்தவித கொரோனா தடுப்பு நடவடிக்கையும் கோவிலில் முறையாக மேற்கொள்ளப்பட வில்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் 2 தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான ஆதாரத்தை காண்பித்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் மூலம் உத்தரவிடப்பட்டது. ஆனால் தற்போது அதனை முறையாக கடைப்பிடிக்க வில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கோவிலில் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News