செய்திகள்
கோப்புபடம்.

திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையம் மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றம்

Published On 2021-10-09 07:43 GMT   |   Update On 2021-10-09 07:43 GMT
தமிழகம் முழுவதும் வரும்1 - ந்தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்க அரசு உத்தரவிட்டது.
திருப்பூர்: 

திருப்பூர் திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர், சப் - இன்ஸ்பெக்டர், போலீசார் என 10 - க்கும் மேற்பட்டோருக்கு கடந்த மே மாதம் கொரோனா ஏற்பட்டது. 

இதனால் காவல் நிலையம் தற்காலிகமாக திருமுருகநாதர் கோவிலுக்கு எதிரே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு மாற்றப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியபோதும் காவல்நிலையம் மாற்றப்படாமல்அங்கேயே செயல்பட்டு வந்தது.

இந்தநிலையில் தமிழகம் முழுவதும் வரும் 1 - ந்தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்க அரசு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்விதுறை சார்பில் பள்ளிகள்முழுவதும் சுத்தம் செய்யவும், பராமரிப்பு பணி மேற்கொள்ளவும் உள்ளதால்போலீசார் பயன்படுத்தி வந்த பள்ளியை காலிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து திருமுருகநாதர் கோவிலுக்கு எதிரே உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் வைத்து இருந்த போலீஸ் நிலைய உபயோகபொருட்கள், டெலிபோன்,வயர்லெஸ் போன்ற மின்னணு பொருட்களை காலிசெய்து மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றப்பட்டது. 

இன்னும் ஒரு சில தினங்களில் இருந்து பழைய போலீஸ் நிலையத்தில் இருந்து அனைத்து பணிகளும் நடைபெறும் என தெரிகிறது. 
Tags:    

Similar News