செய்திகள்
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.

நூல் விலை உயர்வை கண்டித்து பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2021-11-25 09:31 GMT   |   Update On 2021-11-25 09:31 GMT
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்து முன்னணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

நூல் விலை உயர்வை கண்டித்து பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கத்தினர் திருப்பூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். 

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தொழிலாளர்கள் வாழ்வை கெடுக்கும் நூல் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். 

மாதந்தோறும் விலையை ஏற்றி பனியன் தொழிலை அழிக்கக்கூடாது, விலையை ஏற்றும் நூற்பாலைகளை கண்டிக்கிறோம். நூல் விலையை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அப்போது இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறுகையில், திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தேவையில்லாத மத பிரச்சினைகளை எழுப்பாமல்  தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நூல் விலை உயர்வு குறித்து பாராளுமன்ற கூட்டத்தொடரில் பேச வேண்டும்.

அதேபோன்று திருப்பூரில் உள்ள அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இதுகுறித்து கேள்விகள் எழுப்ப வேண்டும். நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்து முன்னணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.
Tags:    

Similar News