செய்திகள்
கோப்புபடம்

ஆவூர் அருகே சுங்கச்சாவடி ஊழியர்கள் 3 பேர் கைது

Published On 2021-04-04 10:22 GMT   |   Update On 2021-04-04 10:22 GMT
ஆவூர் அருகே லாரி டிரைவரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆவூர்:

சேலம் மாவட்டம், களக்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 33). லாரி டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு லாரியில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து கரும்பு ஏற்றிக்கொண்டு திருச்சிக்கு வந்து கொண்டிருந்தார்.

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் தொண்டைமான்நல்லூர் சுங்கச்சாவடிக்கு லாரி வந்தவுடன் அங்கு சுங்கக்கட்டணத்தை செலுத்திவிட்டு டிரைவர் ரமேஷ்குமார் லாரியை எடுத்தார். அப்போது சுங்கச்சாவடி மேற்கூரையில் லாரியில் இருந்த கரும்பு உரசியது. இதனால் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், லாரி டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அங்கு பணியில் இருந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் தொண்டைமான்நல்லூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் முரளி (21), கீரனூர் பழனிசாமி மகன் பிரவீன் (22), திருப்பூர் கிராமத்தை சேர்ந்த பூமையா மகன் தமிழ்ச்செல்வன் (50) ஆகிய 3 பேரும் சேர்ந்து டிரைவர் ரமேஷ்குமாரை பலமாக தாக்கினர்.

இதில் பலத்த காயம் அடைந்த ரமேஷ்குமார் மாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி வழக்குப்பதிவு செய்து சுங்கச்சாவடி ஊழியர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News