சமையல்
முட்டைகோஸ் பட்டாணி சப்ஜி

சத்தான முட்டைகோஸ் பட்டாணி சப்ஜி

Published On 2022-04-18 05:14 GMT   |   Update On 2022-04-18 05:14 GMT
ரொட்டி, சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுக்கு ஏற்ற முட்டைகோஸ் பட்டாணி சப்ஜி எப்படி எளிய முறையில் செய்யறதுன்னு பார்க்கலாம் வாங்க...
 தேவையான பொருட்கள்

முட்டைக்கோஸ் - 250 கிராம்
பட்டாணி - 1 கப்
தக்காளி சாறு - 2 கப்
மஞ்சள் - அரை தேக்கரண்டி
மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி பொடி - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு
கொத்தமல்லி இலை - 1 கைப்பிடியளவு
பச்சை மிளகாய் - 2

செய்முறை

முட்டைகோஸை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்

ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகை போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய், இஞ்சியை சேர்த்து வதக்கிய பின்னர் நறுக்கிய முட்டைகோஸை போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து அதில் பட்டாணியை சேர்த்து தீயை சிம்மில் வைத்து உப்பையும் சேர்த்து கிளறிவிட்டு 2 நிமிடங்கள் வரை மூடி போட்டு மூடி வேகவிடவும்.

2 நிமிடங்கள் கழிச்சி மூடியை திறந்து தக்காளி ப்யூரியை அதில் சேர்க்கவும்.

அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தனியா தூள் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.

இப்போது நம்மோட முட்டைகோஸ் பட்டாணி மசாலா ரெடி!

இதை கொத்தமல்லி தழையை தூவி அலங்கரிச்சு ரொட்டி அல்லது சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷா தொட்டு சாப்பிடலாம். சாம்பார் சாதத்துக்கும் பொருத்தமாக இருக்கும்.
Tags:    

Similar News