தொழில்நுட்பம்
மேக்புக் ஏர்

மேஜிக் கீபோர்டு, அதிவேக இன்டெல் கோர் பிராசஸர் கொண்ட மேம்பட்ட மேக்புக் ஏர் அறிமுகம்

Published On 2020-03-19 06:10 GMT   |   Update On 2020-03-19 06:10 GMT
மேஜிக் கீபோர்டு, இருமடங்கு வேகமான பிராசஸருடன் மேம்பட்ட மேக்புக் ஏர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.



ஆப்பிள் நிறுவனம் தனது மேக்புக் ஏர் சாதனத்தை அப்டேட் செய்து இருக்கிறது. புதிய மேக்புக் ஏர் மாடல் மேஜிக் கீபோர்டு, இருமடங்கு அதிக மெமரி கொண்டிருக்கிறது. அந்த வகையில் இதன் பேஸ் மாடலில் 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய மேக்புக் ஏர் 10-ம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர் கொண்டிருக்கிறது. இது இருமடங்கு வேகமான சி.பி.யு., 80 சதவீதம் வரை வேகமான கிராஃபிக்ஸ் வழங்குகிறது. இதில் 13 இன்ச் ட்ரூ டோன் ரெட்டினா டிஸ்ப்ளே, டச் ஐ.டி. மற்றும் ஒரு நாள் பேட்டரி பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய மேஜிக் கீபோர்டு பயன்படுத்தும் போது சவுகரியமான அனுபவத்தை வழங்கும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.



ஆப்பிள் மேக்புக் ஏர் 2020 சிறப்பம்சங்கள்:

- 13.3 இன்ச் 2560x1600 பிக்சல் 227 PPI ரெட்டினா டிஸ்ப்ளே ட்ரூ டோன்
- 1.1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் இன்டெல் கோர் ஐ3 பிராசஸர்
- 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் இன்டெல் கோர் ஐ5 பிராசஸர் 
- இன்டெல் ஐரிஸ் பிளஸ் கிராஃபிக்ஸ்
- 8 ஜி.பி. 3733MHz ரேம்
- 256 ஜி.பி. / 512 ஜி.பி. எஸ்.எஸ்.டி. மெமரி
- மேக் ஒ.எஸ். கேட்டலினா
- மேஜிக் கீபோர்டு, டச் ஐ.டி.
- ஃபோர்ஸ் டச் டிராக்பேட்
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், வைடு ஸ்டீரியோ சவுண்ட், டால்பி அட்மாஸ் பிளேபேக்
- 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக்
- 2x தண்டர்போல்ட் 3 போர்ட்கள், டிஸ்ப்ளே போர்ட், தண்டர்போல்ட்
- யு.எஸ்.பி. 3.1
- வைபை 802.11ac டூயல் பேண்ட், ப்ளூடூத் 5.0
- 49.9‑வாட் லித்தியம் பாலிமர் பேட்டரி
- 30 வாட் யு.எஸ்.பி. சி பவர் அடாப்டர்

புதிய மேக்புக் ஏர் யுனிபாடி வெட்ஜ் டிசைன் கொண்டிருக்கிறது. இது கோல்டு, சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் கோர் ஐ3, 256 ஜி.பி. மாடல் விலை ரூ. 92,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கோர் ஐ5, 512 ஜி.பி. மாடல் விலை 1299 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 96,510) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் மேக் மினி சாதனமும் அப்டேட் செய்யப்பட்டு இருமடங்கு மெமரியுடன் கிடைக்கிறது. இதன் பேஸ் வெர்ஷனான 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 74,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 512 ஜி.பி. மாடல் விலை ரூ. 1,04,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News