தொழில்நுட்பம்
ரெசிடண்ட் ஈவில்

விற்பனையில் பத்து கோடி மைல்கல்லை கடந்த ரெசிடண்ட் ஈவில்

Published On 2020-06-13 03:36 GMT   |   Update On 2020-06-13 03:36 GMT
உலகின் பிரபல கேமிங் சீரிசான ரெசிடண்ட் ஈவில் சர்வதேச சந்தையில் பத்து கோடி யூனிட்கள் விற்பனையை கடந்துள்ளது.



ஜப்பானை சேர்ந்த வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனமான கேப்காம், ரெசிடண்ட் ஈவில் சீரிஸ் சர்வதேச அளவில் பத்து கோடிக்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அறிவித்துள்ளது. 1996 ஆம் ஆண்டு துவங்கிய ரெசிடண்ட் ஈவில் சீரிஸ் வெளியானது முதல் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.

கேப்காம் நிறுவனத்திற்கு இதுபோன்ற மைல்கல் எட்டிய முதல் கேம் என்ற பெருமையை ரெசிடண்ட் ஈவில் பெற்று இருக்கிறது. வெளியானது முதல் அடுத்தடுத்த தொடர்களை வெளியிட்டதே இதற்கு காரணம் என கேப்காம் தெரிவித்து இருக்கிறது. இதுதவிர ரெசிடண்ட் ஈவில் வில்லேஜில் கேப்காம் தனது அடுத்த கேமிற்கான டீசரையும் வெளியிட்டுள்ளது.



உலகளவில் பத்து கோடி டவுன்லோட்களை கடந்த போதும், ரெசிடண்ட் ஈவில் கேமின் விற்பனையில் 80 சதவீதம் ஜப்பானிற்கு வெளியில் நடைபெற்று இருக்கிறது. ரெசிடண்ட் ஈவில் பிராண்டிங் சார்பில் கேமானது பொழுதுபோக்கு பூங்கா மற்றும் திரைப்படங்கள் உள்ளிட்டவற்றுடன் கூட்டணி அமைக்கப்பட்டது.

இத்துடன் தொடர்ந்து புதிய தொடர்களை வெளியிட்டது மற்றும் ரெசிடண்ட் ஈவில் 2, ரெசிடண்ட் ஈவில் 3 போன்ற பழைய கேம்களின் ரீமாஸ்டர் செய்யப்பட்ட பதிப்புகளை வெளியிட்டது இத்தனை யூனிட்கள் விற்பனைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. விற்பனை எண்ணிக்கை கேமின் கணினி மற்றும் கன்சோல்களுக்கான பதிப்புகளை உள்ளடக்கியது ஆகும்.
Tags:    

Similar News