லைஃப்ஸ்டைல்
புருவம் அடர்த்தியாக வளர இதை செய்யலாம்

புருவம் அடர்த்தியாக வளர இதை செய்யலாம்

Published On 2019-09-25 03:48 GMT   |   Update On 2019-09-25 03:48 GMT
சில பெண்களுக்கு புருவங்கள் மிகவும் சிறியதாகவும் அடர்த்தி குறைந்தும் காணப்படும். புருவங்களின் வளர்ச்சியை அதிகரித்து, அடர்த்தியை அதிகரிக்க உதவும் சில எளிய இயற்கை வழிகளை பார்க்கலாம்.
பொதுவாக சில பெண்களுக்கு புருவங்கள் மிகவும் சிறியதாகவும் அடர்த்தி குறைந்தும் காணப்படும். இதற்காக சிலர் கண் மைகளைப் பயன்படுத்தி, புருவங்களை வரைந்து கொள்வார்கள். இதற்கு புருவங்களின் வளர்ச்சியை அதிகரித்து, அடர்த்தியை அதிகரிக்க உதவும் சில எளிய இயற்கை வழிகளை உள்ளன. தற்போது அதில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

* தினமும் கற்றாழை ஜெல்லை புருவங்களின் மீது தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

* இரவில் படுக்கும் முன் வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயைக் கொண்டு தினமும் புருவங்களின் மீது தடவி மசாஜ் செய்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

* தினமும் பாலை புருவங்களின் மீது தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் 2 முறை செய்து வந்தால், புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.

* வெங்காய சாற்றினை அல்லது அதன் பேஸ்ட்டை புருவங்களின் மீது இரவில் படுக்கும் போது தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

* விளக்கெண்ணெயை புருவங்களின் மீது தடவி மென்மையாக மசாஜ் செய்து, 30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

* மஞ்சள் கருவை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, புருவங்களின் மீது தடவி நன்கு காய்ந்த பின், குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

* தேங்காய் எண்ணெயை புருவங்களின் மீது தடவி, மசாஜ் செய்து, சிறிது நேரம் நன்கு ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

* 2 துளி டீ-ட்ரீ எண்ணெயுடன், 3 துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, புருவங்களின் மீது தடவி, நன்கு மசாஜ் செய்து ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
Tags:    

Similar News