செய்திகள்
கைது

புயல் நிவாரண முகாமில் ஊராட்சி மன்ற ஊழியர்களிடம் தகராறு- வாலிபர் கைது

Published On 2020-11-26 10:43 GMT   |   Update On 2020-11-26 10:43 GMT
வலங்கைமான் அருகே, புயல் நிவாரண முகாமில் ஊராட்சி மன்ற ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வலங்கைமான்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நிவர் புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு நிவாரண பணியில் ஈடுபடுவதற்காக ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வலங்கைமான் அருகே மணலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள புயல் நிவாரண முகாமில் நேற்று முன்தினம் இரவு ஊராட்சி செயலாளர் ரம்யா மற்றும் ஊழியர்கள் பணியில் இருந்தனர்.

அப்போது அங்கு வந்த 3 பேர் ரம்யா மற்றும் அங்கிருந்த ஊழியர்களிடம் அநாகரிகமாக பேசி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரம்யா வலங்கைமான் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித்ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சோத்தமங்கலம் மந்தைவெளி தெருவை சேர்ந்த பூவரசன் (வயது24) உள்பட 3 பேர் ஊராட்சி மன்ற ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பூவரசனை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சிவசக்தி (24), சரத்குமார் (25) ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News