செய்திகள்
கவனத்தை ஈர்த்த உதயநிதியின் முககவசம்

முக ஸ்டாலின் பதவி ஏற்பு விழா - கவனத்தை ஈர்த்த உதயநிதியின் முககவசம்

Published On 2021-05-07 13:46 GMT   |   Update On 2021-05-07 13:46 GMT
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழக முதல்-அமைச்சராக ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ எனக் கூறி உறுதிமொழி ஏற்று தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்றார்.
சென்னை:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழக முதல்-அமைச்சராக ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ எனக் கூறி உறுதிமொழி ஏற்று தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்றார்.  பதவியேற்ற சில நிமிடங்களிலேயே, தனது தனிப்பட்ட டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்-அமைச்சர் என இணைத்துக்கொண்டார். மேலும், அவரது டுவிட்டர் பக்கத்தில் இடம்பெற்றுள்ள தனிப்பட்ட விவரங்களில் ’திராவிட இனத்தைச் சேர்ந்தவன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. மேலும் இதே விவரங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் மாற்றியுள்ளார். தனது கவர் புகைப்படத்தையும் ‘இனி தமிழ் வெல்லும்’ என மாற்றியுள்ளார்.

அதுபோல்   பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்ற முககவசம் அணிந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News