செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங்,

அமெரிக்க பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பு ரத்து: சீனா அறிவிப்பு

Published On 2019-12-16 02:28 GMT   |   Update On 2019-12-16 02:28 GMT
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கும் முடிவை சீனா கைவிட்டுள்ளது.
பீஜிங் :

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இருதரப்புக்கும் இடையில் முதல் கட்ட ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இதன் விளைவாக சீன பொருட்கள் மீதான 15 சதவீத கூடுதல் வரி விதிப்பை அமெரிக்கா ரத்து செய்தது.

இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கும் முடிவை சீனா கைவிட்டுள்ளது. இதனை சீனாவின் நிதி அமைச்சகம் நேற்று அறிவித்தது. அமெரிக்க பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பு நேற்று முதல் அமலுக்கு வர இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News