செய்திகள்
விமான நிலையம்

கொரோனாவுக்கு மத்தியிலும் கோவா விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published On 2020-08-18 20:04 GMT   |   Update On 2020-08-18 20:04 GMT
கொரோனாவுக்கு மத்தியிலும் கோவா விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 12 மடங்கு அதிகரித்து இருக்கிறது.
பனாஜி:

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. பின்னர் உள்நாட்டு விமான போக்குவரத்து மட்டும் மே 25-ந்தேதி முதல் தொடங்கியது. எனினும் கொரோனா அச்சுறுத்தலால் விமான பயணங்களுக்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை.

ஆனால் கோவா சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த ஏப்ரல் மாதம் 27 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில், ஜூலையில் இந்த எண்ணிக்கை சுமார் 12 மடங்கு அதிகரித்து இருக்கிறது.

இது இந்தியாவில் இயல்பு நிலை திரும்புவதன் அடையாளமாகும் எனக்கூறியுள்ள இந்திய விமான நிலைய ஆணையம் (ஏ.ஏ.ஐ.), இதன் மூலம் விரைவில் இயல்பான போக்குவரத்துக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டு உள்ளது. இந்த கொரோனா காலத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க விமான நிலைய ஆணையமும், அனைத்து விமான நிலையங்களும் உறுதி பூண்டுள்ளதாக தனது டுவிட்டர் தளத்தில் ஏ.ஏ.ஐ. கூறியுள்ளது.
Tags:    

Similar News