செய்திகள்

உலகக்கோப்பைக்கான நேரத்தை ஆஷஸ் தொடர் பயிற்சிக்காக பயன்படுத்த விரும்பும் ஹசில்வுட்

Published On 2019-05-15 11:45 GMT   |   Update On 2019-05-15 11:45 GMT
உலகக்கோப்பைக்கான நேரத்தை ஆஷஸ் தொடர் பயிற்சிக்காக பயன்படுத்த விரும்புகிறேன் என்று ஹசில்வுட் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட். பந்தை ‘ஸ்விங்’ செய்வதில் வல்லவரான இவருக்கு உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஜைல் ரிச்சர்ட்சன் காயத்தால் விலகியபோது, இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், கேன் ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டார்.

கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் விளையாடிய ஹிசில்வுட், இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உலகக்கோப்பை நடைபெறும் மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேிதி வரையிலான நாட்களை ஆஷஸ் தொடருக்கு பயன்படுத்த இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹசில்வுட் கூறுகையில் ‘‘உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்காதது சற்று ஏமாற்றம் அளிக்கிறது. உலகக்கோப்பை நான்கு வருடத்திற்கு ஒரு முறைதான் வரும். கடந்த முறை சொந்த மைதானத்தில் விளையாடிய அனுபவம் எனக்கு உள்ளது. சொந்த மைதானத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம்.



உலகக்கோப்பை நடக்கும்பொழுது நான் டிவி-யில் பார்த்துக் கொண்டிருப்பேன். அதுதான் சற்று வருத்தத்தை கொடுக்கிறது. தொடரில் பாதியில் யாராவது ஒருவருக்கு காயம் அடைந்தால், வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.

உலகக்கோப்பை இடம்பெறாத நிலையில், மேலும் சில நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இது ஆஷஸ் தொடருக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும்’’ என்றார்.
Tags:    

Similar News