லைஃப்ஸ்டைல்
பெண்கள் அதிகம் விரும்பும் எடை குறைவான சணல் நகைகள்

பெண்கள் அதிகம் விரும்பும் எடை குறைவான சணல் நகைகள்

Published On 2021-05-26 06:29 GMT   |   Update On 2021-05-26 06:29 GMT
நகைகளுக்கு பெண்களின் அலங்காரத்தில் மிக முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் சணலால் செய்யப்பட்ட எடை குறைவான வண்ணமயமான நகைகள் இப்போது பெண்களின் கவனத்தை ஈர்க்கின்றன.
நகைகளுக்கு பெண்களின் அலங்காரத்தில் மிக முக்கிய பங்கு உண்டு. தங்கம் மற்றும் வெள்ளியால் செய்த நகைகள் மட்டுமில்லாமல் காகிதக்கூழ், டெரகோட்டா, பட்டுநூலிலும் விதிவிதமாக நகைகள் செய்யப்படுகின்றன. அந்த வகையில் சணலால் செய்யப்பட்ட எடை குறைவான வண்ணமயமான நகைகள் இப்போது பெண்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

,சணல் நகைகள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காதவை. நவீனமும், பாரம்பரியமும் கலந்த டிசைன்களில் கிடைக்கிறது. இவற்றின் நிறம் மங்குவதில்லை. தனித்துவமாகவும், குறைந்த விலையிலும் கிடைப்பதால் அனைத்து வயதினரையும் ஈர்க்கின்றன. இதனால் உலக சந்தையில் இவற்றுக்கு தனி மவுசு இருக்கிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்த மெட்டீரியல்ல சணலுக்குத்தான் முதலிடம். சணல்ல இன்னிக்கு உடைகள், செருப்புகள் வரை சகலமும் பண்றாங்க. சணல் நகைகள் லேசானவை. ‘சணலா... சருமத்தை உறுத்தாதா’னு பயப்பட வேணாம். கொஞ்சம்கூட உறுத்தாது. எந்த கலர் டிரெஸ்ஸுக்கும் மேட்ச்சா சணல் நகைகள் பண்ண முடியும்கிறது இதுல சிறப்பு. பட்டு, காட்டன்னு எந்த மெட்டீரியலுக்கும், புடவை, சல்வார், வெஸ்டர்ன்னு எந்த டிரெஸ்ஸுக்கும் இந்த நகைகள் பொருத்தமா இருக்கும். குறிப்பா காட்டனுக்கு ரொம்பப் பிரமாதமா பொருந்தும்.

சணல் துணி, சணல் கயிறு, சாயம், பசை, மரமணிகள், அலங்காரப் பொருட்கள், லேஸ் என இதற்குத் தேவையான பொருட்களுக்கான முதலீடாக 1,000 ரூபாய் போதும்.‘‘சணல் துணியைப் பதப்படுத்திச் செய்யற முறை, சணல் கயிறுகள்ல சாயம் ஏத்திச் செய்யற முறை, ஒட்டற முறை, தைக்கிற முறை, லேஸ் வைத்துச் செய்யற முறைனு இதுல 5 வகை உண்டு.

சணல் வளையல்களையும் 2 விதமான செய்முறையில டிசைன் பண்ணலாம். இந்த 7 அடிப்படைகளைத் தெரிஞ்சுக்கிட்டாலே நூற்றுக்கணக்கான டிசைன்களை கற்பனைக்கேத்த படி உருவாக்க முடியும். 100 ரூபாய்லேருந்து அதிகபட்சமா 400 ரூபாய் வரை விற்கலாம். 50 சதவிகித லாபம் நிச்சயம். தோடு, ஜிமிக்கி, ஹாரம், வளையல், பிரேஸ்லெட், ஹேர் கிளிப், ஹேர் பேண்டு... இப்படி என்ன வேணா டிசைன் பண்ணலாம்..

Tags:    

Similar News