செய்திகள்
டிக்-டாக்

காவல் நிலையத்திற்குள் டிக்-டாக் செய்த பெண் காவலர் சஸ்பெண்ட்

Published On 2019-07-25 05:22 GMT   |   Update On 2019-07-25 08:03 GMT
குஜராத் மாநிலத்தில் காவல் நிலையத்திற்குள் டிக்-டாக் மூலம் நடனமாடியதற்காக பெண் காவலர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்படுள்ளார்.
வாரணாசி:

குஜராத் மாநிலம் மெகசானா மாவட்டத்தில் உள்ள லங்னாஜ் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் அர்பிதா சவுத்ரி. எப்போதும் டிக்-டாக் செயலியையே பார்த்துக் கொண்டிருக்கும் இவர், தானும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்துள்ளார்.

இதையடுத்து காவல் நிலையத்திற்குள் லாக் அப் அருகே மாற்று உடையில் நின்றுக் கொண்டு இந்தி பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோவினை டிக்-டாக் செயலியில் போடவே, அது படு வைரலானது.



காவல் நிலையத்தில் பொறுப்பில்லாமல் காவலரே செயல்படலாமா? என பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து சவுத்ரியை இடை நீக்கம் செய்ய துணை  காவல்துறை கண்காணிப்பாளர் மஞ்சிதா உத்தரவிட்டார். மேலும் துறை நீதியாக சவுத்ரியை விசாரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மஞ்சிதா கூறுகையில், ‘பணி நேரத்தில் சீருடை இல்லாமல் இருந்துள்ளார். அதோடு, காவல் நிலையத்திற்குள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் போட்டுள்ளார். இதனால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்’ என கூறியுள்ளார். 
Tags:    

Similar News