செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று கட்டாயமில்லை - செங்கோட்டையன்

Published On 2019-11-22 18:17 GMT   |   Update On 2019-11-22 18:17 GMT
அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என கட்டாயமில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம்  கூறியதாவது:-

ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறும் விவகாரத்தில் அனைத்து சங்கங்களிடமும் கருத்து கேட்கப்பட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று கட்டாயமில்லை.

ரஜினி சொன்ன அற்புதம், அதிசயம் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு நடந்துள்ளது. 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசு பணி வழங்கப்படும் என்று கூறினார்.

மேலும், அமைச்சர்கள் அன்பும், அறனுமாய் நடந்து கொண்டதால் இடைத்தேர்தலில் மக்கள் வெற்றி பெற வைத்தனர். அமைச்சர்கள் யாரும் சர்வாதிகாரப்போக்கில் நடந்து கொள்ளவில்லை என மு.க.ஸ்டாலின் புகாருக்கு அமைச்சர் பதில் அளித்தார்.
Tags:    

Similar News