செய்திகள்
முக கவசமின்றி விற்பனை

முக கவசமின்றி விற்பனை : பெட்ரோல் விற்பனை நிலையம், ஓட்டலுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Published On 2020-10-14 18:28 GMT   |   Update On 2020-10-14 18:28 GMT
முக கவசமின்றி விற்பனை செய்த பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் ஓட்டலுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் செந்துறை பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் சோதனை செய்தார். இதில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, முக கவசம் இல்லாமல் விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு ரூ.5 ஆயிரம், அம்பேத்கர் சிலை அருகே உள்ள ஓட்டலுக்கு ரூ.5 ஆயிரம், மற்றொரு ஓட்டலுக்கு ரூ.500 மற்றும் முக கவசம் அணியாத வாகன ஓட்டிகளிடம் அபராதமாக ரூ.3,200 என மொத்தம் ரூ.13 ஆயிரத்து 700 அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

இந்த ஆய்வின்போது செந்துறை தாசில்தார் முத்துகிருஷ்ணன், கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடனிருந்தனர். கோட்டாட்சியரின் இந்த அதிரடி நடவடிக்கை, கொரோனா பரவல் அச்சம் இல்லாமல் செந்துறை பகுதியில் விதிமுறைகளை மீறும் வணிக வளாகங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News