உலகம்
போரிஸ் ஜான்சன்

ஊரடங்கில் விருந்து நிகழ்ச்சிகள் - லண்டன் போலீசார் விசாரணை தொடக்கம்

Published On 2022-01-25 14:14 GMT   |   Update On 2022-01-25 14:14 GMT
ஊரடங்கு காலத்தில் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
லண்டன்:

இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா வைரஸ் முதல் அலை ஏற்பட்டபோது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் லண்டன் நகரின் டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. போரிஸ் ஜான்சனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. அவருக்கு சொந்த கட்சியான கன்சர்வேடிவ் கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்தது.

இதற்கிடையே, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் கீழ் சபையில் பேசிய போரிஸ் ஜான்சன், கொரோனா விதிமுறைகளை மீறி விருந்தில் பங்கேற்றது தவறு என ஒப்புக்கொண்டார். அதற்காக மன்னிப்பு கேட்டார். ஆனால், போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடத்தியது பற்றி லண்டன் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.  
இதுதொடர்பாக மெட்ரோபொலிடன் காவல் ஆணையாளர் கிரெஸ்சிடா டிக் கூறுகையில், டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில் நடந்த எண்ணற்ற நிகழ்ச்சிகள் பற்றி ஸ்காட்லாந்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News