உள்ளூர் செய்திகள்
பழுதடைந்துள்ள தொகுப்பு வீடுகள்.

புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தர அரசுக்கு கோரிக்கை

Published On 2022-01-09 09:09 GMT   |   Update On 2022-01-09 09:09 GMT
வேதாரண்யம் அருகே தொகுப்பு வீடுகள் புதிதாக கட்டித்தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் தொகுப்பு வீடுகள் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன. இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேதாரண்யம் தாலுக்கா பஞ்சநதிக்குளம் மேற்கில் வேம்பதேவன்காடு பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்திராகாந்தி நினைவு தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு அதில் குடியிருந்து வருகின்றனர். 

இதில் 17 வீடுகள் தற்போது முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. கடந்த மழைக்காலத்தின் போது வீட்டின் மேற்கூரையில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியில் தெரிகின்றன.

இந்த 17 வீடுகள் எப்போது இடிந்து விடும் என்ற அச்சத்திலேயே அந்த வீட்டில் மக்கள் வசித்து வருகின்றனர். வீடுகள் சேதம் அடைந்து அபாய நிலையில் உள்ளதால் ஒவ்வொரு நாளும் இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் இரவு நேரத்தில் குழந்தையுடன் தூங்காமல் தவிர்த்து வருவதாக வீட்டில் 
வசிப்போர் தெரிவித்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து ஆபத்தான விளைவுகளை எதிர்கொள்ள அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றி விட்டு வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News