செய்திகள்
போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய தளபதிகள்

விமானப்படை தினம்- போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முப்படை தளபதிகள்

Published On 2019-10-08 03:47 GMT   |   Update On 2019-10-08 03:47 GMT
விமானப்படை தினத்தை முன்னிட்டு மறைந்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் முப்படை தளபதிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
புதுடெல்லி:

இந்திய விமானப் படை, உலக அளவில் சக்தி வாய்ந்த படைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. எனவே ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ந்தேதி இந்திய விமான படை தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இன்று 87வது இந்திய விமான படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

விமானப்படை தினத்தையொட்டி, மறைந்த வீரர்களுக்கு தேசிய போர் நினைவிடத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.  ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பதாரியா, கடற்படை தளபதி கரம்பீர் சிங் ஆகியோர் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.



விமானப்படை தினத்தையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், நமது விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நாடே பெருமையுடன் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய விமானப்படை மிகுந்த அர்ப்பணிப்புடனும் சிறப்புடனும் நாட்டிற்கு தொடர்ந்து சேவை செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News