செய்திகள்
வாட்ஸ்அப்

செல்போனில் வாட்ஸ்அப் செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் கிடையாது -டெல்லி ஐகோர்ட்

Published On 2021-01-25 10:47 GMT   |   Update On 2021-01-25 10:47 GMT
வாட்ஸ்அப் செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் கிடையாது என்பதை அனைவரும் உணர வேண்டும் என டெல்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

வாட்ஸ்அப் செயலி சமீபத்தில் வெளியிட்ட புதிய விதிகளுக்கு (பிரைவசி பாலிசி) எதிராக டெல்லி ஐகோர்ட்டில் சைதன்யா ரோகில்லா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதி சச்தேவா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மனோகர் லால் வாதாடினார். மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேட்டன் சர்மா ஆஜராகி, பிரைவசி பாசிலி விஷயத்தில் வாட்ஸ்அப் நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்டிருப்பதாக தெரிவித்தார். தரவு பாதுகாப்பு மசோதா தொடர்பாக விவாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

அதன்பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதி, வாட்ஸ் அப் போன்ற செயலிகளை பயன்படுத்துவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் என்றும், வாட்ஸ்அப் செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்வது கட்டாயம் கிடையாது, விரும்பினால் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றும் கூறினார்.

மத்திய அரசு எழுப்பிய கேள்விக்கு வாட்ஸ்அப் பதிலளித்து வருவதை டெல்லி உயர் நீதிமன்றம் கவனித்து, அதன் பின்னர் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என்று கூறிய நீதிபதி, வழக்கை மார்ச் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Tags:    

Similar News