செய்திகள்
சரத்பவார் ராகுல்காந்தி

சரத்பவாருடன் ராகுல்காந்தி கைகோர்க்க வேண்டும்: சிவசேனா வலியுறுத்தல்

Published On 2021-06-25 02:09 GMT   |   Update On 2021-06-25 02:09 GMT
காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற ஒரு அணி உள்ளது. ஆனால் நாட்டில் வலுவான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட எதிர்க்கட்சி இருக்கிறதா? இந்த கேள்வி இன்னும் நிலுவையில் உள்ளது.
மும்பை :

மத்தியில் ஆளும் பாஜ வுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஈடுபட்டு உள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, ராஷ்டிரிய லோக் தளம் மற்றும் இடதுசாரி கட்சிகள் உட்பட 8 எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தை சரத்பவார் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நடத்தினார். இது பாஜ வுக்கு எதிரான 3-வது அணி அமைக்கும் முயற்சி என்றும், காங்கிரசையும் தவிர்க்கும் முயற்சி என்றும் கூறப்படுகிறது.

இதற்கு மத்தியில் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கடந்த 2 வாரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர்
சரத்பவா
ரை 3 முறை நேரில் சந்தித்து பேசினார்.

இந்தநிலையில் மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வரும் சிவசேனா தனது அதிகாரப்பூர்வ கட்சி பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டுவர காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் கைகோர்க்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர்களின் தேநீர் விருந்து ராகுல் காந்தியால் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்று கருதுகிறோம்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரால் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க முடியும். ஆனால் இதில் தலைமை பற்றிய கேள்வி உள்ளது. காங்கிரசை தவிர்த்து ஒரு எதிர்க்கட்சியை உருவாக்கும்போதும், ஒரு கூட்டணியில் தேசிய தலைவருக்கான வெற்றிடம் ஏற்படும்.

காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற ஒரு அணி உள்ளது. ஆனால் நாட்டில் வலுவான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட எதிர்க்கட்சி இருக்கிறதா? இந்த கேள்வி இன்னும் நிலுவையில் உள்ளது.

சரத்பவாரின் டெல்லி இல்லத்தில் நடைபெற்ற தேநீர் விருந்து எதிர்க்கட்சிகளின் தற்போதைய நிலையை எடுத்து காட்டியது. 2½ மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பு ஊடகங்களால் மிகைப்படுத்தப்பட்ட போதிலும் எந்த விதத்திலும் பலனளிக்கவில்லை.

பாஜ  மற்றும் மோடி எதிர்ப்பு என்ற ஒற்றை குறிக்கோளுடன் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டுமா என்பது குறித்து முதலில் விவாதிக்கப்பட வேண்டும்.

இன்று நாடு எதிர்கொள்ளும் சவால்கள் மலை போன்றது. இந்த பிரச்சினைகள் குறித்து மாற்று தலைமை என்ன நினைக்கிறது?

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தேவை ஒரு வலுவான எதிர்க்கட்சி. ஆனால் அத்தகைய எதிர்க்கட்சி தேசிய மட்டத்தில் இல்லை. ராகுல் காந்தி மத்திய அரசு மற்றும் அதன் கொள்கைகள் குறித்து டுவிட்டரில் தான் போராடி வருகிறார்.

பிரதமர் மோடியின் உடல் மொழி தற்போது மாறி உள்ளது. நாட்டின் சூழல் அவரது கைமீறி சென்று விட்டதை அவர் உணர்கிறார். ஆனால் வலுவான எதிர்க்கட்சி இல்லாததால் தங்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று
பாஜமற்றும் மத்திய அரசு நம்பிக்கையில் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News