செய்திகள்
மக்கள் நீதி மய்யம்

ஆகஸ்ட் 31ம் தேதிக்குப் பின் ஊரடங்கு தேவைதானா? -மக்கள் நீதி மய்யம் கேள்வி

Published On 2020-08-29 09:25 GMT   |   Update On 2020-08-29 09:25 GMT
இ-பாஸ் முறை தேவையில்லை என மத்திய அரசு அறிவுறுத்திய பின்னரும், இனியும் அது குறித்த ஆலோசனையே தேவையற்றது என மக்கள் நீதி மய்யம் கூறி உள்ளது.
சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் குமாரவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இ-பாஸ் முறை தேவையில்லை என மத்திய அரசு அறிவுறுத்திய பின்னரும், இனியும் அது குறித்த ஆலோசனையே தேவையற்றது.  உடனடியாக பொது போக்குவரத்தை ஓரளவாவது தொடங்கி, மக்கள் வேலைக்குச் செல்லும் வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்!

ஆகஸ்ட் 31-க்குப்பின் ஊரடங்கு தேவைதானா என்று அரசு பரிசீலிக்க வேண்டும். மக்கள் வேலைக்கு செல்லும் வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும். அதற்கு இ-பாஸ் தளர்வு மட்டும் போதாது. அரசு பொதுப் போக்குவரத்தை ஓரளவாவது இயங்க வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News