தொழில்நுட்பம்
ஆப்பிள்

ஆப்பிள் விருது வென்ற 19 வயது இந்திய மாணவர்

Published On 2020-06-18 13:00 GMT   |   Update On 2020-06-18 13:00 GMT
கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி ஸ்விஃப்ட் பிளேகிரவுண்ட் உருவாக்கிய இந்திய மாணவர் ஆப்பிள் விருது போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார்.



ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வுக்கான 2020 ஸ்விஃப்ட் ஸ்டூடன்ட் மாணவர் விருதினை புது டெல்லியை சேர்ந்த 19 வயது மாணவரான பலாஷ் தனெஜா வென்றிருக்கிறார். 2020 ஸ்விஃப்ட் ஸ்டூடன்ட் மாணவர் போட்டியில் 41 நாடுகளை சேர்ந்த 350 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

போட்டியில் கலந்து கொண்ட தனெஜா கொரோனா வைரஸ் பாதிப்பின் போது சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதால் நோய் தொற்று எவ்வாறு குறைகிறது என்பதை விவரிப்பதோடு, கோடிங்கை கற்பிக்கும் ஸ்விஃப்ட் பிளேகிரவுண்டினை உருவாக்கினார்.

இவருடன் இந்திய வம்சாவெளியை சேர்ந்த டேவ் ஜா எனும் மாணவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு சார்ந்த சிமுலேட்டரை உருவாக்கியதற்கு இதே விருதினை வென்றிருக்கிறார். இவர் சமூக இடைவெளியை பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகளை விவரித்து இருந்தார்.



ஸ்விஃப்ட் பிளேகிரவுண்ட் தவிர ஆன்லைன் வலைதளம் சார்ந்த சேவையினை தனெஜா உருவாக்கி இருக்கிறார். இந்த சேவை மெஷின் லெர்னிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொசுக்களால் பரவும் டெங்கு போன்ற நோய்கள் எவ்வாறு பரவுகின்றன என்பதை கணிக்கும். 

புதிய ஸ்விஃப்ட் பிளேகிரவுண்ட் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால் உருவாக்கப்பட்டது. இதை கொண்டு மக்களுக்கு சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதன் நன்மைகளை பற்றி விவரிக்க முடியும். 

முன்னதாக இவர் கண்டறிந்த சேவை ஒன்று ஆன்லைனில் கிடைக்கும் முன்னணி கல்வி சார்ந்த வீடியோக்களை 40 மொழிகளில் மொழிமாற்றம் செய்கிறது.
Tags:    

Similar News