செய்திகள்
குளித்தலை காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாட்டு வண்டிதொழிலாளர்களை படத்தில் காணலாம்.

மணல் அள்ள அனுமதி வழங்கக்கோரி குளித்தலையில், மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-11-19 10:15 GMT   |   Update On 2020-11-19 10:15 GMT
மணல் அள்ள அனுமதி வழங்கக்கோரி குளித்தலையில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குளித்தலை:

கரூர் மாவட்ட பாரதீய மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் மற்றும் மாவட்ட பகுதியில் இயங்கும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கங்கள் சார்பில் குளித்தலை காந்தி சிலை அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் மாவட்ட பாரதீய மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்க தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், கரூர் மாவட்டத்தின் அருகில் உள்ள மாவட்டங்களிலும் தடையின்றி தொடர்ந்து மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து மாட்டுவண்டி தொழிலாளர்களின் கோரிக்கையை புறக்கணித்து வருகிறது.

மேலும் மற்ற மாவட்டங்களில் உள்ளது போல, கரூர் மாவட்டத்திலும் காவிரி ஆற்றில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News