செய்திகள்
கொரோனா வைரஸ்

கும்பகோணத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வர்த்தக சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை

Published On 2021-04-04 10:47 GMT   |   Update On 2021-04-04 10:47 GMT
நகராட்சி சார்பில் வணிகர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏதுவாக சிறப்பு முகாம்களை அமைக்க ஆவன செய்யப்படும் ஒருங்கிணைப்பை சங்கங்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

கும்பகோணம்:

கொரோனா நோய் தொற்று பரவல் கும்பகோணம் பகுதியில் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நகராட்சியில் ஆணையர் லெக்ஷ்மி தலைமையில் நகர்நல அலுவலர் மருத்துவர் பிரகாஷ் முன்னிலையில் குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் தலைவர் சோழா.சி.மகேந்திரன் ,துணைத்தலைவர் பா.ரமேஷ்ராஜா மற்றும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சங்கங்களின் முதன்மை நிர்வாகிகள் பங்கேற்றனர். தொழில் வணிக நிறுவனங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை விதி முறைகளை கடைபிடிப்பதில் தற்போது தொய்வுநிலை உள்ளதாகவும் இதனால் நோய்பரவல் மேலும் அதிகரிக கூடும் என்பதால் உடனடியாக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை முன்பு போல் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கலெக்டரால் அமைக்கப்பட்டுள்ள சுற்றாய்வு கண்காணிப்பு குழு அலுவலர்கள் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது அதிகபட்ச அபராதமும் அவசியமெனில் வணிக முடக்கமும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. நகராட்சி சார்பில் வணிகர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏதுவாக சிறப்பு முகாம்களை அமைக்க ஆவன செய்யப்படும் ஒருங்கிணைப்பை சங்கங்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் நகர சுகாதார ஆய்வாளர்களும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News