ஆட்டோமொபைல்
ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்

உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திய ராயல் என்பீல்டு

Published On 2021-05-13 08:50 GMT   |   Update On 2021-05-13 08:50 GMT
மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கார்ப்பரேட் அலுவல ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்றுவர் என ராயல் என்பீல்டு தெரிவித்துள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனம் தனது சென்னை ஆலை உற்பத்தி பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி மே 13 துவங்கி மே 16 ஆம் தேதி வரை ஆலை பணிகளை நிறுத்துகிறது. இந்த காலக்கட்டத்தில் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளது.



சென்னையில் திருவொட்டியூர், ஒரகடம் மற்றும் வல்லம் வடகால் போன்ற பகுதிகளில் மூன்று ஆலைகளை ராயல் என்பீல்டு இயக்கி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக விற்பனை மையங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து ராயல் என்பீல்டு தகவல் தெரிவித்து வருகிறது. 

சென்னை மற்றும் குர்கிராம் பகுதிகளில் செயல்படும் ராயல் என்பீல்டு அலுவலகங்கள் மற்றும் கார்ப்பரேட் அலுவலக ஊழியர்கள் மறு அறிவிப்பு வெளியாகும் வரை தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்றுவர் என ராயல் என்பீல்டு தெரிவித்து இருக்கிறது.
Tags:    

Similar News