செய்திகள்
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர்-வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா

’வங்காளதேசத்திற்கு எப்பொழுதும் முன்னுரிமை கொடுக்கப்படும்’ - இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் பேச்சு

Published On 2020-08-19 16:10 GMT   |   Update On 2020-08-19 16:13 GMT
கொரோனா வைரசுக்கு தடுப்பூசியை இந்தியா உருவாக்கும்போது அதில் வங்காளதேசத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்கா தெரிவித்துள்ளார்.
டாக்கா:  

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்கா 2 நாட்கள் அரசுமுறை பயணமாக நேற்று வங்காளதேசம் வந்தார். இந்த பயணத்தின்போது வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவை வெளியுறவுத்துறை செயளாலர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

மேலும், இருநாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றன.

பயணத்தின் இறுதி நாளான இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்கா உள்பட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பின்போது, இந்தியாவில் உருவாக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளை பெற வங்காளதேசத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படுமான என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய ஹர்ஷ்வர்தன்,’எங்களை (இந்தியா) பெறுத்தவரை வங்காளதேசத்திற்கு எப்போதுமே முன்னுரிமை கொடுக்கப்படும்’ என்றார்.

Tags:    

Similar News