செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 98.85 அடியாக சரிந்தது

Published On 2021-04-06 09:05 GMT   |   Update On 2021-04-06 09:05 GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்தை விட, தொடர்ந்து தண்ணீர் அதிகமாக திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லை. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இன்று காலை முதல் விநாடிக்கு 79 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

நீர்வரத்தை விட, தொடர்ந்து தண்ணீர் அதிகமாக திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 98.85 அடியாக சரிந்தது.
Tags:    

Similar News